முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ தனது முதலீட்டாளர்கள் மூலம் ரூ.1,800 கோடி திரட்டியுள்ளது. கோரா, பிடிலிட்டி, டைகர் குளோபல், பவ் வேவ், ட்ராகனீர் ஆகிய ஐந்து நிறுவனங்கள் புதிய முதலீடுகளை சோமேட்டோவில் மேற்கொண்டுள்ளன.
இதன்மூலம், சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாயை சோமேட்டோ நிறுவனம் திரட்டியுள்ளது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் சோமேட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது ரூ.391 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டில், கோவிட்-19 லாக்டவுன் காரணமாக உணவு டெலிவரி நிறுவனங்கள் சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக முடக்கம் கண்ட நிலையில், இந்தத் துறை தற்போது மீட்சி கண்டுள்ளதை சோமேட்டோ நிறுவனத்தின் வளர்ச்சி குறிப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மப்பேட்டில் பல்முனைய போக்குவரத்து வளாகம் அமைக்க ஒப்பந்தம்