உலகப் பொருளாதாரம் இந்த ஆண்டு சுமார் 5.2 விழுக்காடு வரை சுருங்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. சுமார் 80 ஆண்டுகளில், இதுவே மோசமான பொருளாதார மந்தநிலை எனவும்; ஒரே நேரத்தில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவைச் சந்திப்பதால், அதன் கடுமை கடந்த 150 ஆண்டுகள் காணாதது எனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
கிருமித்தொற்று நீண்ட நாள்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பின்விளைவுகளை உருவாக்கும் என்றும், 70 மில்லியன் முதல் 100 மில்லியன் மக்கள் வரை, கடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர் என்றும் உலக வங்கியின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு பொருளாதாரம் மீளும் என்று சிலர் முன்னுரைத்தாலும், இரண்டாம் அலைக் கிருமிப்பரவல் ஏற்பட்டால், நாடுகளின் பொருளாதார மீட்சி கடுமையாகவே பாதிக்கப்படும்.
அப்போது, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், எல்லாத் தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். அதனால் உலகப் பொருளாதாரம் 8 விழுக்காடு வரை, சுருங்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: NIL ஜிஎஸ்டி தாக்கல்செய்பவரா நீங்கள்? - அப்படின்னா இது உங்களுக்கான நற்செய்திதான்!