ETV Bharat / business

வீழ்ச்சியிலிருந்து மீளும் ஆட்டோமொபைல் துறை - உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பது என்ன?

author img

By

Published : Feb 11, 2021, 9:38 AM IST

கோவிட்-19 காரணமாக கடும் வீழ்ச்சி கண்ட ஆட்டோமொபைல் துறை தற்போது மீட்சியை கண்டுவருகிறது. இந்தச் சூழலில் துறைசார் உற்பத்தியாளர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்பு குறித்து சிறப்புச் செய்தித்தொகுப்பு.

ஆட்டோமொபைல் துறை
ஆட்டோமொபைல் துறை

சென்னை: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2020 மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாடு முற்றாக முடங்கியது. இதன் காரணமாக தொழில்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன. இதில் அதிக பாதிப்பைச் சந்தித்த துறை ஆட்டோமொபைல்தான்.

தெற்காசியாவின் டெட்ராய்ட் எனப்படும் சென்னையின் பொருளாதாரமும் இதனால் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேர்ந்தது. தற்போது கோவிட்-19 பாதிப்பு குறைந்து இயல்புநிலை திரும்பிவரும் சூழலில், ஆட்டோமொபைல் துறை சிறப்பாகச் செயல்படுவதாகத் தொழில்துறையினர் கூறுகின்றனர்.

பாஸ்கரன், காக்லூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம்

இது பற்றி கருத்து தெரிவித்த காக்லூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் பாஸ்கரன், "ஹூண்டாய், யமஹா, ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மூலப் பொருள்கள் வழங்கிவருகிறேன். ஆட்டோமொபைல் துறை மீண்டுவருகிறது, அடுத்த சில மாதங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். காக்கலூர் தொழிற்பேட்டையில் 250 நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்த உற்பத்தியிலேயே ஈடுபட்டுவருகின்றன. தற்போது இவை அனைத்தும் பரபரப்பாக இயங்கிவருகின்றன. அடுத்த மூன்று மாதங்கள் வரை ஆர்டர்கள் உள்ளன.

சில நாள்களுக்கு முன்புவரை சற்று ஆள்பற்றாக்குறை, போக்குவரத்துப் பிரச்சினை இருந்தது, தற்போது அதுவும் இல்லை. மத்திய அரசு கரோனா கால சிறப்பு கடன்களை வழங்கியுள்ளதால் நிதிப் பிரச்சினை இல்லை. வாகனங்களை உற்பத்தி செய்யும் பெரு நிறுவனங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன, இதனால் அவர்களுக்குப் பொருள்களை வழங்கிவரும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் அதிக அளவில் உள்ளன.

ஹூண்டாய் மாதத்துக்கு 60 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்கிறார்கள். இந்தாண்டு 8 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்பு ஏற்றுமதி அதிகம் இருக்கும், தற்போது உள்ளூர் சந்தைகளே சிறப்பாக இயங்கிவருகின்றன. உள்நாட்டுச் சந்தையின் தேவையையே பூர்த்திசெய்ய முடியாமல் நிறுவனங்கள் திணறிவருகின்றன.

அக்டோபர் வரை மொத்த திறனில் 30 விழுக்காடு அளவு மட்டுமே உற்பத்தி செய்தோம்; தற்போது 90 விழுக்காட்டிற்கு மேல் உற்பத்திச் செய்கிறோம். ஜிஎஸ்டி வரியில் சலுகைகள், வட்டிச் சலுகைகள் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கரோனா முடக்க காலத்தில் சராசரி பயன்பாட்டின் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதனை அரசு திரும்ப வழங்கினால் ஊக்கமாக இருக்கும்" என்றார்.

பாலசந்திரன், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம்

ஆட்டோமொபைல் உற்பத்தி கரோனா காலத்திற்கு முன்பிருந்த நிலையை அடைந்துவிட்டதாகச் சொல்கிறார் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பாலசந்திரன்.

இது குறித்து அவர் பேசுகையில், "அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மொத்தம் உள்ள 2,000 சிறு, குறு நிறுவனங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றன. தற்போது ஆட்டோமொபைல் உற்பத்தி கரோனா முந்தைய நிலையை அடைந்துவிட்டது. இருப்பினும், மூலப் பொருள்கள் விலை உயர்வால் உற்பத்தியாளர்களின் லாபம் குறைவாக உள்ளது.

மாதம் இருமுறை மூலப் பொருள்களின் விலை உயர்ந்தது. இதுவரை 35 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. ஆனால், சிறு நிறுவனங்களிடம் ஆர்டர் வழங்கும் பெரு நிறுவனங்கள் அதற்கான விலையை வழங்கவில்லை, இதனால் லாபம் கிடைக்கவில்லை. மூலப் பொருள்களின் உற்பத்தி வரியை குறைப்பதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இனிதான் உள்நாட்டுச் சந்தையில் விலை குறைய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.

கஜராஜன், திருமழிசை தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம்

திருமழிசை தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க துணைத் தலைவர் கஜராஜன் பேசும்போது, "1992ஆம் ஆண்டுமுதல் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தியில் ஈடுபட்டுவருகிறேன். தற்போது தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை இருந்துவந்தது.

கடைசியாக கரோனா தொற்று தொழில் துறைக்கு மிகப்பெரிய அடியாக விழுந்தது. தற்போது நிலைமை சற்று சீரடைந்துள்ளது. கரோனா தொற்று காலத்தில் அரசின் உத்தரவுக்கு ஏற்ப தொழிற்சாலைகளை மூடியிருந்தோம்.

இருப்பினும், தொழில் முடங்கியிருந்தாலும் தொழிற்சாலை வாடகை, தொழிலாளர்களுக்கு ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டியிருந்தது. மேலும், மூடியிருந்த காலத்துக்குச் சராசரி அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் மூடியிருந்த காலத்தில் எதற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும். வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ததைப் போல ஊடரங்கு காலத்தில் நிறுவனங்களின் மின் கட்டணத்தையும் முழுமையாக ரத்துசெய்ய வேண்டும்.

இது குறு நிறுவனங்களுக்கு பெரும் கடன் சுமையாக உள்ளது. வொர்கிங் கேப்பிட்டல் வட்டியை ரத்துசெய்ய வேண்டும். மேலும், சிறு, குறு நிறுவனங்களுக்கு நிதி, ஆள்பற்றாக்குறை, மூலப் பொருள்கள் விலை உயர்வு ஆகியவை பெரும் பிரச்சினைகளாக உள்ளன. மின் இணைப்பு சீராக இல்லை, ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவருகிறோம். நாள்தோறும் இரண்டு முதல் மூன்று முறை மின் தடை ஏற்படுகிறது. இதனால் முழுவீச்சில் உற்பத்தியில் ஈடுபட முடியவில்லை.

இது குறித்து சிட்கோ இயக்குநர், மின் துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் அளித்தும் பயனில்லை. திருமழிசை தொழிற்பேட்டையில் துணைமின் நிலையம் அமைக்க உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நிலம் ஒதுக்கிக் கொடுத்தோம். இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வரையரையை மத்திய அரசு அண்மையில் மாற்றிய அமைத்தது. இதனால் சிறு நிறுவனங்களுக்கும், நடுத்தர நிறுவனங்களுக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்துள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், சிறப்புத் திட்டங்களைப் பெரு நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் சூழல் நிலவுகிறது.

சிறு நிறுவனங்களுக்கு தனி கவனம் செலுத்தினால் வங்கிக் கடன்கள், திட்டங்களை அறிவித்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தற்சமயம் சீனாவிலிருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு நோக்கிவருகின்றன. இங்கு தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு வருகின்றன.

இதன்மூலம் தமிழ்நாட்டிற்கு ஏராளமான முதலீடுகள், வேலைவாய்ப்புகள் வர வாய்ப்புள்ளன, ஆனால் இதனைச் சரியாக ஈர்ப்பதற்கு சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவது முக்கியம்" என்று எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க: வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தது தவறா... பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.