ETV Bharat / business

Viஆன வோடபோன் ஐடியா - பயனாளர்களுக்கு வழங்கப்படும் சேவையில் மாற்றம்? - வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள்

வோடபோன் - ஐடியா தனது புதிய ஒருங்கிணைந்த பிராண்ட் அடையாளத்தை இன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

Vodafone Idea
Vodafone Idea
author img

By

Published : Sep 7, 2020, 5:36 PM IST

இந்திய டெலிகாம் சந்தையை ஜியோவுக்கு முன் ஜியோவுக்கு பின் என்று இரண்டு கட்டங்களாக பிரிக்கலாம். ஜியோவின் அதிரடி ஆப்பர்களை எதிர்கொள்ள முடியாமல் மற்ற நிறுவனங்கள் திணறின.

ஜியோவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஏதுவாக, இந்தியாவின் இரண்டு முக்கிய டெலிகாம் நிறுவனங்களாக இருந்த வோடபோனும் ஐடியாவும் ஒரே நிறுவனமாக இணைக்கப்படும் என்று 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த இணைப்பு பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் புதிய ஒருங்கிணைந்த பிராண்ட் அடையாளம் Vi இன்று வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் வோடபோன்-ஐடியா நிறுவனம் Vi (We) என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வோடபோன்-ஐடியா நிறுவனம் 2020ஆம் ஆண்டு மே மாதம் 30.9 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்ததாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் இந்த வாடிக்கையாளர்களில் ஒருவராக இருந்தால், இந்த புதிய பிராண்டிங் உங்களின் தற்போதைய மொபைல் சேவையை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்.

உங்கள் மொபைல் எண் மாறுமா?

வாடிக்கையாளர்கள் தங்களின் தற்போதைய எண்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று வி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள திட்டங்களும் சேவைகளும் முன்பிருந்தைப் போலவே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் புதிய சிம் பெற வேண்டுமா?

உங்களுடைய தற்போதைய சிம் தொடர்ந்து செயல்படும். புதிய சிம் கார்ட்டை வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

இருப்பினும், நீங்கள் புதிய சிம்மை வாங்க விரும்பினால் அது புதுப்பிக்கப்பட்ட பிராண்ட் அடையாளத்தையும் லோகோவையும் கொண்டிருக்கும்.

தற்போதுள்ள எந்தவொரு சேவையும் பாதிக்கப்படுமா?

இந்த புதிய பிராண்டிங் என்பது வாடிக்கையாளர் சேவையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும், நிறுவனத்தின் சேவைகள் பழையபடியே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

My Vodafone App தொடர்ந்து செயல்படுமா?

இப்போது வாடிக்கையாளர்கள் Vi ™ என்ற புதிய செயலியை பதிவிறக்கம் செய்தால், புதிய சலுகைகளைப் பெற முடியும் என்று அந்நிறுவனம் சொல்கிறது. இந்தியாவில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரிலும், ஆப் ஸ்டோரிலும் பழைய My Vodafone App நீக்கப்பட்டு அதற்கு பதிலாக Vi ™ என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது.

புதிய Vi™ செயலியில் வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம்?

இந்தப் புதிய செயலியைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யலாம், பில்கள் செலுத்தலாம், கணக்கு விவரங்கள் மற்றும் கட்டண வரலாற்றை சரிபார்க்கலாம்.

மேலும், “Happy Surprises” எனப்படும் விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் GoPro சாதனங்கள், நெட்ஃபிக்ஸ் சந்தா மற்றும் பலவற்றை பெறலாம்.

வோடபோன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் மாற்றப்பட்டுள்ளதா?

ஆம். வி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது - www.myvi.in. பழைய வலைதளத்திற்கு சென்றாலும், அது நம்மை இந்த புதிய போர்ட்டலுக்கு அழைத்துச் செல்கிறது.

வோடபோன் ஸ்டோர்கள் என்னவாகும்?

வோடபோன் ஸ்டோர்கள் மற்றும் வோடபோன் மினி ஸ்டோர்கள் இப்போது V™ கடைகளாக மறுபெயரிடப்பட்டுள்ளன. எனவே, புதிய லோகோவை கண்டு குழப்பமடைய வேண்டாம். அங்கு வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் பழையபடி தொடர்ந்து அளிக்கப்படும்.

இதையும் படிங்க:IFA Berlin 2020: 200 மில்லி விநாடிகளில் பதிலளிக்கும் சென்சார் கருவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.