ETV Bharat / business

தனியார் மயமான நிலக்கரிச் சுரங்கங்கள்? - பிசினஸ் நியூஸ்

41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ. 33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இச்சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 0.5 முதல் 40 மில்லியன் டன் வரை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் நிலக்கரி எடுத்துக்கொள்ள முடியும்.

நிலக்கரி
நிலக்கரி
author img

By

Published : Jun 18, 2020, 8:47 PM IST

டெல்லி: நிலக்கரி உற்பத்தியில் தனியார் முதலீடுகளை ஈர்க்க 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

முதல்கட்டத்தில் 17 பில்லியன் டன் அளவிற்கான நிலக்கரியை அரசு ஏலம் விட உள்ளது. இச்சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 0.5 முதல் 40 மில்லியன் டன் வரை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் நிலக்கரி எடுத்துக்கொள்ள முடியும்.

நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று (ஜூன் 18) உடைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக சுரங்க பணிகளுக்கு ஏலம் விடும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கரோனா நோய்க்கிருமி தொற்றிலிருந்து பொருளாதார வீழ்ச்சியை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், நாட்டிற்கு உதவ அரசின் ஆத்மா பாரத் நிர்பர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வர்த்தக ரீதியில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம், புதிய தொடக்கம் ஏற்படும் என்று மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதுடன், தற்சார்பு நிலையை இந்தியா அடைய முடியும் என்றும் தொழிற்சாலை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஏலத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதில், 'நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு இன்று உடைக்கப்பட்டுள்ளது என்றும் 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால் 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ. 33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், 'இறக்குமதியை குறைப்பது தான் சுயசார்பு இந்தியாவின் வெற்றி ஆகும். நாடு தற்சார்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை கரோனா நமக்கு புகட்டி உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள கரோனா நெருக்கடியை வளர்ச்சிக்கான வாய்ப்பாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். நம் இறக்குமதி செய்வதை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது தான் தற்சார்பு இந்தியா திட்டம்.

நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். வர்த்தக ரீதியில் நிலக்கரி உற்பத்தியை அனுமதிப்பதன் மூலம் இந்தியா மிகப்பெரிய நாடாக முடியும். தற்போது உலகிலேயே அதிகளவு நிலக்கரியை இறக்குமதி செய்வதில் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.

முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படவில்லை. சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடுவதன் மூலம் நிலக்கரி உற்பத்தியை முடக்கத்தில் இருந்து விடுவிக்க முடியும். 2014ஆம் ஆண்டுக்கு பிறகு சுரங்க ஏலத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி ஏலத்தில் பல்வேறு மாற்றங்களை பாஜக ஆட்சி மேற்கொண்டுள்ளது' என்று அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.