அமெரிக்க நிறுவனமான உபர் டெக்னாலஜிஸ் (Uber technologies) 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சான் பிரான்ஸிஸ்கோவை (San Francisco) தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், உணவு விநியோக சேவை (Food Delivery Services), வாகன சேவை(Ride Service Hailing) ஆகியவைகளை வழங்கிவருகிறது. இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட சரிவு காரணமாக 350 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக உபர் தலைமை அலுவலர் ஹோஸ்ரோவ்ஷஹி (Khosrowshahi) தெரிவித்துள்ளார்.
பங்குச்சந்தையில் உபர் பங்குகள் 30 சதவீத சரிவை சந்தித்தது. முதலீட்டார்கள் உபர் பங்குகளை வாங்க தயக்கம் காட்டிவருவதுதான் இந்த வேலை நிறுத்தத்திற்கான காரணம் எனத் தெரிவித்த ஹோஸ்ரோவ்ஷஹி, இதன் பிறகு பங்குச்சந்தையில் உபர் பங்குகள் நான்கு சதவீதம் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் கடந்த ஜூலை, செப்டம்பர் ஆகிய மாதங்களில் உபர் நிறுவனம் 800 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!