ETV Bharat / business

டெல்லி சந்தையில் தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை - தக்காளி விலை

டெல்லி: மொத்த சந்தைகளில், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் இந்த மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளதால் தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tomatoes selling below Re 1 per kg in Delhi wholesale markets  Tomatoes selling below Re 1 per kg  tomato prices  business news  டெல்லி காய்கறி விலை  தக்காளி விலை  காய்கறி விலைகள்
tomato prices
author img

By

Published : May 24, 2020, 3:34 PM IST

இது குறித்து ஓக்லா மண்டியின் தணிக்கையாளர் விஜய் அஹுஜா கூறுகையில், "சந்தையில் காய்கறி சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதன் காரணமாக தேவை குறைவாக உள்ளது என்று மண்டி வர்த்தகர்கள், முகவர்கள் கூறுகின்றனர். மற்ற பச்சை காய்கறிகளும் கால் முதல் பாதி விலைக்கே விற்கப்படுகின்றன.

'கியா, சுரைக்காயின் விலை கிலோ ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் 'துரை' (ரிட்ஜ் கோர்ட்) ஒரு கிலோ 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல், மற்ற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. இந்த மாதத்தில் இதுவரை வெங்காயத்தின் சராசரி விலை ஒன்றரை ரூபாய் குறைந்துள்ளது. டெல்லியில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறியதால் விலை குறைந்துள்ளது" என்றார்.

ஆசாத்பூர் மண்டியில் தொழிலதிபரும், இந்திய வணிக சங்கத்தின் தலைவருமான ராஜேந்திர சர்மா கூறுகையில், "உணவகங்கள், தபாக்கள், விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் காய்கறிகளின் நுகர்வு குறைந்துள்ளது. இது தவிர, டோக்கன் அமைப்பு காரணமாக, வாடிக்கையாளர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டும். இது பொதுமக்கள் சந்தைக்கு வருவதைத் தடுக்கிறது. ஆனால் பழங்களுக்கான தேவை குறையவில்லை, எனவே பழங்களின் விலை குறையவில்லை.

மே 1ஆம் தேதி தக்காளியின் மொத்த விலை கிலோவுக்கு 6-15.25 ரூபாய் ஆக இருந்தது. கடந்த மூன்று நாள்களாக ஒரு கிலோவுக்கு ரூ. 0.75- 5.25 ரூபாய் ஆகும். இதேபோல், மே 1 அன்று வெங்காயத்தின் மொத்த விலை கிலோவுக்கு ரூ. 4.50 -11.25 ஆக இருந்தது. சனிக்கிழமை கிலோவுக்கு ரூ. 2.50-8.50 ரூபாய் ஆக இருந்தது.

இருப்பினும், டெல்லி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில், காய்கறி விற்பனையாளர்கள் ஒரு கிலோ தக்காளியை ரூ. 15-20க்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல், மற்ற காய்கறிகளின் விலைகளும் மொத்த விலையை விட அதிகமாக விற்பனை செய்கின்றனர்" எனக் கூறினார்.

இதையடுத்து, பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்யும் ஆர்.கே. புரம் சிவ்பால் கூறுகையில், "மண்டியில் மொத்த சந்தையில் இருந்து கொண்டு வரும் காய்கறிகள், பழங்கள் கெட்டுப்போகின்றன. இது தவிர, போக்குவரத்து கட்டணம் அதிகமாக உள்ளது. இதனால், மொத்த சந்தையை விட அதிக விலைக்கு விற்க வேண்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க:11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி - ஒத்தி வைக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.