டைட்டன் நிறுவனம் 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 17 ஆண்டுகள் நிர்வாக இயக்குநராக இருந்த பாஸ்கர் பட், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஓய்வுபெற்றார். பாஸ்கர் பட் 33 ஆண்டுகள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் மீது பல பங்குதாரர்கள் கவனம் செலுத்தியதற்கு, பாஸ்கரின் செயல்முறைதான் காரணம். இவர், பங்குதாரர்களின் மதிப்பை மேம்படுத்தியது மட்டுமில்லாமல், டைட்டன் நிறுவனம் புதிய உயரங்களை எட்டக் கூடிய வகையில் மிக வலுவான அடித்தளத்தையும் உருவாக்கித் தந்துள்ளார்.
இந்நிலையில் பாஸ்கர் பட் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக டைட்டன் நிறுவனத்தில் முதன்மை செயல் அலுவலராகவும், 2005ஆம் ஆண்டு முதல் நகை வணிகத்தின் தலைமை நிர்வாக அலுவலராகவும் இருந்த சி.கே. வெங்கட்ராமன், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டைட்டன் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதையும் படிங்க:ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்மார்ட்ஃபோன்!