ETV Bharat / business

மத்திய பட்ஜெட் 2021-22! - காத்திருக்கும் திருப்பூர்!

திருப்பூர்: மத்திய பட்ஜெட்டில் திருப்பூருக்கு தேவையான திட்டங்கள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என தொழில்துறையினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

author img

By

Published : Jan 29, 2021, 4:26 PM IST

budget
budget

திருப்பூரில் திரும்பும் திசை எங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் வொர்க் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதிகளவு அந்நிய செலாவணியை ஈட்டும் தொழிலாக இருந்து வருவதால், ஆடை தயாரிப்பு தொழில் இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து கொண்டிருக்கிறது.

முழு ஊரடங்கில் அரசு கொடுத்த தளர்வுகளால் கடந்த மாதத்தில் 4 ஆயிரத்து 374 கோடிக்கு மட்டுமே திருப்பூரிலிருந்து ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தொழில்துறையினர் விடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பின்னலாடை துறைக்கு என ஒரு சிறப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2021-22! - காத்திருக்கும் திருப்பூர்!

தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பெருகி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது இருப்பிட வசதிகளை உறுதிப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மருத்துவமனை, வங்கிக் கடன்களை தொழில்துறைக்கு விரைவாக வழங்க நடவடிக்கை, கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதோடு, சரக்கு விமானங்கள் வந்து செல்ல வழிவகை போன்ற பல்வேறு கோரிக்கைகள், வரும் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாக தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பேட் பேங்க் என்ற பெயரில் இந்திய நிறுவனங்களை அபகரிக்க வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.