ETV Bharat / business

'குறைந்த தொகை செலுத்தும் சந்தாதாரரின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது' - டெமா - வணிக செய்திகள்

தொலைத்தொடர்புத் திட்டங்கள், தரவு வேகம் போன்றவற்றில் சந்தாதாரர்களிடையே எந்தவிதமான சார்புகளையும் நிறுவனங்கள் காட்டக் கூடாது என்பதனையும், குறைந்த தொகையைச் செலுத்தும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதையும் தொலைத்தொடர்புக் கருவிகள் உற்பத்திச் சங்கமான டெமா (TEMA) தெரிவித்துள்ளது.

டெமா
டெமா
author img

By

Published : Jul 28, 2020, 1:37 AM IST

டெல்லி: சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சந்தாதாரர்களுக்கு முன்னுரிமை தொலைத்தொடர்புத் திட்டங்களை வழங்குகின்றன என்று தொலைத்தொடர்புக் கருவிகள் உற்பத்திச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் என்.கே. கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னுரிமை திட்டங்கள் சில வாடிக்கையாளர்களுக்கு இணையத்தின் தரத்தில் வேறுபாடுகளை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த நடவடிக்கை அதிக ஊதியம் பெறும் சில்லறை சந்தாதாரர்களையும், பெருநிறுவன சந்தாதாரர்களையும் ஈர்ப்பதற்காக இருக்கலாம் என்று கோயல் தெரிவித்தார். ட்ராய் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கும் அவர் தன் ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

2 ஜிபி டேட்டா ஃபைல்களை அனுப்பும் வசதி - அதிரடி காட்டும் டெலிகிராம்

முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் பிளாட்டினம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மாதத்திற்கு ரூ.499 அல்லது அல்லது அதற்கு மேல் செலுத்தும் பிளாட்டினம் வாடிக்கையாளர்கள் 4ஜி இணைய சேவையை அதிவேகத்தில் பெறுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்தது. மற்றவர்களை விட பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறியிருந்தது.

அதேபோல் வோடஃபோன்-ஐடியா நிறுவனமும் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரெட் எக்ஸ் (REDX) என்ற போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் ரூ.999 செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50% அதிவேக இணைய சேவை மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.

ஒரே சீன நிறுவனம் பல பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையை ஆட்கொண்டு வருவது உங்களுக்கு தெரியுமா?

இச்சூழலில் ஏர்டெலின் பிளாட்டினம் மற்றம் வோடஃபோன்-ஐடியாவில் ரெட் எக்ஸ் திட்டங்களை நிறுத்திவைக்குமாறு ட்ராய் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரீமியம் திட்டங்களால் அதில் சேராத வாடிக்கையாளர்களின் சேவை தரம் பாதிக்கப்படும் என்றும், விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதாகவும் ட்ராய் தெரிவித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சேவைகள் வழங்கப்படுகிறது என்பது தொடர்பாகவும் தெளிவான வரையறைகள் இல்லை எனவும் ட்ராய் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.