கரோனா தடுப்பு ஊரடங்கு காலத்தில் தொலைத்தொடர்பு துறை முக்கியப் பங்குவகித்தது. அக்காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு துறையில், தொலைத்தொடர்பு துறையின் பங்கு 30-35 விழுக்காடு ஆக உள்ளது. செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, ஆராய்ச்சி நிறுவனமான டெக்கார்சி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்தப் புதிய அறிக்கை, “இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 விழுக்காடு நேரடி பங்களிப்பு” என்றும் அறிக்கை தெளிவுப்படுத்துகிறது. மேலும் அறிக்கையில், “நெருக்கடி காலத்தில் தொலைத்தொடர்பு துறைக்கு ஆதரவளிக்க மத்திய- மாநில அரசுகளுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செல்லுலார் ஆபரேட்டர்கள் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் ராஜன் எஸ் மேத்யூஸ் கூறுகையில், "தொலைத் தொடர்புத் துறையின் சரியான நேரத்தில் தலையீடு, பல்வேறு மாநில, உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புடன் இது சாத்தியமாகி உள்ளது” என்றார்.
மேலும், “டெலி-மெடிசின், ஆன்லைன் கல்வி, ட்ரோன் கண்காணிப்பு, கைத்தொழில் உள்ளிட்ட நுகர்வு அதிகரித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நோக்கியாவின் இந்தியச் சந்தைப்படுத்தல் கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவர் அமித் மர்வா கூறுகையில், “பாதுகாப்பான, அளவுகோல், தூண்டுதல் ஆகிய மூன்று கொள்கைகளில் உலகளாவிய நடைமுறைகளை இந்தியத் தொலைத்தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்புக்கு விரிவுப்படுத்தினோம்.
எதிர்கால தேவைகளுடன் அவைகள் இணைக்கப்படும். இந்த இணைப்பு ஒரு மிகப்பெரிய சவாலாகும்” என்றார். ஆய்வு குறித்து டெக்கார்சியின் நிறுவனரும், தலைமை ஆய்வாளருமான பைசல் கவூசா, “வாடிக்கையாளர்களுக்கு மிகவும் திறமையாக சேவை வழங்கும் பொருட்டு, தொலைத்தொடர்பு கோரிக்கைகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும். ஐந்தாம் தலைமுறை (5ஜி) போன்ற தொழில்நுட்பங்கள், வேலையை மேலும் மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்படாத சொத்துகள் ஆறு மடங்கு அதிகரிப்பு!