ஆரோக்கியமற்ற உணவுக்கு வரி விதிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா கடந்த வெள்ளிக்கிழமை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் ‘இந்தியாவில் ஊட்டச்சத்து ஆராய்ச்சியின் தந்தை’ என்று அழைக்கப்படும் மறைந்த டாக்டர் சி.கோபாலன் நினைவு நாளில் சொற்பொழிவு ஆற்றியபோது தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றுடன் இணைந்திருப்பது ஊட்டச்சத்து குறைபாடு. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் பிரச்னைகள் என்றும் அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிக வருமானம் கொண்ட நாடுகளின் பிரச்னைகள் என்றும் நாம் எப்போதும் நினைக்கிறோம், ஆனால் யதார்த்தம் இந்த இரண்டுமே குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வளர்ந்துகொண்டேவரும் பிரச்னை ஆகும்.
ஊட்டச்சத்து குறைபாடு குறித்த தரவுகளை சுட்டிக்காட்டிய அவர், உலகளவில் சுமார் 2.3 பில்லியன் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிக எடையுடன் உள்ளனர், மேலும் சுமார் 1.50 மில்லியன் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியம் குன்றிய குழந்தைகளாக உள்ளனர். அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் சுமை மிக வேகமாக வளர்ந்துவருகிறது, மேலும் ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதம் குறைந்துவருகிறது. இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை சரிசெய்ய ஆரோக்கியமற்ற அதிக உப்பு, அதிக கொழுப்பு, அதிக இனிப்பு நிறைந்த உணவுக்கு வரி விதிப்பதும், ஊட்டச்சத்து தகவல்களை லேபிளிங் செய்வது கட்டாயமாக்குவது இந்த சிக்கலை தீர்க்க உதவும் என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க ஹிந்துஜா குழுமம் தயார்?