புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் கார், பல சிறப்பு அம்சங்களை கொண்டது. குறிப்பாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் GNCAP 5 நட்சத்திர தரநிலை கொண்டு இந்த கார் மிகப் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை பெற்றுள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் தொழில் துறையின் முதல் முழுமையான, BSVI தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாடா மோட்டார்ஸின் பயணியர் வாகனங்கள் பிரிவின் தலைவர் மயங்க் ப்ரீக் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ப்ரீமியம் ஹேட்ச்பேக்.தி அல்ட்ராஸின் அறிமுகத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகின்றோம். 5 நட்சத்திர குளோபல் NCAP தர மதிப்பீட்டை பெற்றுள்ள இரண்டாவது டாடா கார் இது என்பதிலும் மற்றும் ஒரு இந்திய கார் என்பதிலும் எங்களை பெருமைப்படுத்தும் காராக அல்ட்ராஸ் திகழ்கிறது. இந்த காரில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன என தெரிவித்த அவர், நிச்சயமாக மக்கள் இதை வரவேற்பார்கள் என நம்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.
டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.5.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியா முழுவதும் ஒரே விலையில் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெளியேறிய வோடஃபோன்... அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்!