கொரோனா வைரஸ் தாக்குதலால், நீண்ட நாள்களாக சரிவை சந்தித்துவந்த இந்தியப் பங்குச்சந்தை இன்று உயர்வை கண்டுள்ளது. மேலும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து 35,841 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34 புள்ளிகள் உயர்ந்து 10,486 எனவும் வர்த்தகத்தைத் தொடங்கியது.
கடந்த சில தினங்களாகவே சரிவை சந்தித்துவந்த யெஸ் வங்கி பங்குகள் இன்று சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. யெஸ் வங்கியின் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி கைக்குள் கொண்டுவந்ததால் பங்குச்சந்தையில் அதன் பங்குகள் அனைத்தும் சரிவை சந்தித்தன.
ஆனால் இன்று தொடங்கிய பங்குச்சந்தையில், 10 விழுக்காடு வரை யெஸ் வங்கி பங்குகள் உயர்ந்துள்ளன. மேலும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளும் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன.
இதையும் படிங்க: கொரோனா எதிரொலி - இறைச்சியின் விற்பனை 35% சரிவு