ETV Bharat / business

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

author img

By

Published : Nov 10, 2020, 10:36 PM IST

மும்பை: பங்குச்சந்தைகள் தற்போது உயர்வதை மனத்தில் வைத்துக்கொண்டு விரைவான லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று எச்சரித்த சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி அட்வைசரி பிரிவின் தலைவர் தேவாங் மேத்தா, சிறந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.

Stock market
Stock market

இந்திய பங்குசந்தைகள் கடந்த இரண்டு நாள்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்துவருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 43,000 புள்ளிகளை கடந்துள்ளது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 170 புள்ளிகள் உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 12,631 புள்ளிகளில் தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றது, கரோனா தடுப்புமருந்து குறித்த ஃபைஸர் நிறுவனத்தின் நம்பிக்கைக்குறிய அறிவிப்பு ஆகியவற்றுடன் பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றியும் இணைந்துகொள்ள இந்திய பங்குச்சந்தைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தன.

இந்திய, சீனா உள்ளிட்ட உலகின் முக்கிய பொருளாதாரங்களில் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இன்னும் சில காலத்திற்கு இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து உயரும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஈக்விட்டி அட்வைசரி பிரிவின் தலைவர் தேவாங் மேத்தா, "பொதுவாகவே சந்தை நிச்சயமின்மையை விரும்பாது. கரோனா தடுப்புமருந்து குறித்த அறிவிப்பும், அமெரிக்க அதிபர் தேர்தலில் சுமுகமான முடிவு கிடைத்துள்ளதும் சந்தையை உற்சாகப்படுத்தியுள்ளது.

கார்ப்பரேட்டுகளின் வருவாய் சிறப்பாக உள்ளதும் சந்தையில் போதுமான பணப்புழக்கம் உள்ளதும் பங்குச்சந்தை உயர்வை மேலும் அதிகரிக்கும்" என்றார்.

இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தேவாங் மேத்தா, "விரைவாக பணத்தை சம்பாதிக்க வர்த்தகத்தில் இறங்குவதைவிட நீண்ட நாள் முதலீடுகளில் நம்பிக்கை வையுங்கள்" என்றார்.

பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய ஏதுவாக இந்தாண்டு ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் மட்டும் சுமார் 24 லட்சம் டீமேட் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், "ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன் அந்நிறுவனம் குறித்து தேவையான தகவல்களை அறிந்திருக்க வேண்டும். மேலும், பங்குகளை தவணை முறையில் வாங்க வேண்டும்.

முதலீடுகள் என்பது நீண்ட காலத்திற்கானவை. வெறும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் அதிக லாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யுங்கள். மேலும், நீங்கள் நல்ல பங்குகளை வாங்கியிருந்தால், உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்" என்றார்.

இதையும் படிங்க: இனி அமேசானில் கிரிகெட்டையும் கண்டு ரசிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.