ETV Bharat / business

சிறிய ரக வென்டிலேட்டர்களை அறிமுகப்படுத்திய ஸ்பைஸ்ஜெட்! - ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சிறிய ரக வென்டிலேட்டர்கள் அறிமுகப்படுத்தியுள்ளது.

SpiceJet launches portable ventilator for patients with moderate breathing issues SpiceJet launches portable ventilator SpiceJet launches portable ventilator for patients SpiceJet launches ventilator Spicejet business news ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் சிறிய ரக வென்டிலேட்டர்கள் அறிமுகம் ஸ்பைஸ்ஜெட் ஸ்பைஸ் ஆக்ஸி

author img

By

Published : Aug 31, 2020, 9:45 PM IST

டெல்லி: லேசான-மிதமான சுவாச பிரச்னைகள் உள்ள நோயாளிகளுக்கு ஸ்பைஸ்ஜெட் ஒரு சிறிய ரக வென்டிலேட்டரை திங்கள்கிழமை (ஆக.31) அறிமுகப்படுத்தியது.
இதனை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான டெக்னிக் இன் பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு 'ஸ்பைஸ் ஆக்ஸி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தச் சாதனம் குறைந்த எடை கொண்டதாக இருப்பதால், அதை வீட்டிலும், ஆம்புலன்சிலும், இராணுவ அடிப்படை முகாம்கள், மருத்துவமனைகள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளிலும், சக்கர நாற்காலிகளிலும் பயன்படுத்தலாம்.

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் தனது அறிக்கையில், “இந்தச் சாதனம் லேசான மற்றும் மிதமான சுவாச சிக்கல்களைக் கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ள தீர்வாகும். ஆதலால் கரோனா வைரஸ் அறிகுறி கொண்ட நோயாளிகளுக்கும் குறிப்பிடத்தக்க உதவியாக இருக்கும்.

  • SpiceOxy is a compact, affordable non-invasive ventilator made in India that will help address the shortage of ventilators in India. We encourage such innovation, scientific research and entrepreneurial mindset in the MSME sector. My best wishes to @flyspicejet team! pic.twitter.com/w2C8YtCJEd

    — Nitin Gadkari (@nitin_gadkari) August 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், நாங்கள் ஆக்சிமீட்டர் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இது ஒரு எளிமையான சாதனம், இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மக்கள் எளிதாக அளவிட உதவுகிறது. இரண்டு சாதனங்களையும் விமான நிறுவனத்தின் ஈ-காமர்ஸ் வலைத்தளத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், “ நாங்கள் இன்று அறிமுகம் செய்யும் ஸ்பைஸ் ஆக்ஸி வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிமீட்டர் ஆகிய இரண்டும் மேக் இன் இந்தியா (உள்நாட்டில் உற்பத்தி செய்வோம்) திட்டத்தின் கீழ் திறமையான பொறியாளர்களை கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இதனை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் கண்டுபிடித்துள்ள சிறிய ரக வென்டிலேட்டரான ஸ்பைஸ்ஆக்ஸி கருவிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சரக்கு போக்குவரத்து மேம்பாட்டுக்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்த ஏர்பஸ் ஏ340 சரக்கு விமானம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.