நாள்தோறும் வணிகச் சந்தையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த நான்கு நாள்களாகவே தங்கத்தின் விலை இறங்குமுகமாக உள்ளது. தங்கம் விலை வீழ்ச்சியால் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தங்கம் விலை
நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 35,464 என இருந்தது. இன்று (செப். 9) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து ரூ. 4,433 என நிர்ணயம் செய்யப்படுகிறது.ஆக சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து ரூ. 35,464 என விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,797 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,376 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ. 68.50 என நிர்ணயம் செய்யப்பட்டு, கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து ரூ. 68,500 ஆக விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: எங்கு, எப்படி, எவ்வாறு வாங்கலாம் - அக்டோபர் டெலிவரி'