தொடர் சரிவில் தங்கம் - தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து சவரனுக்கு ரூ. 34,952 என விற்பனையாகிறது.

தொடர் சரிவில் தங்கம்
தங்கம் விலை கடந்த இரண்டு நாள்களாக தொடர் சரிவில் உள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,369 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து ரூ. 34,952 ஆக விற்பனையாகிறது.
24 காரட் கட்டித் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,733 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 37,864 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 70 காசுகள் குறைந்து ரூ. 64.20 என விற்பனையாகிறது. கிலோ வெள்ளிக்கு ரூ. 1,700 குறைந்து ரூ. 64,200 என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'Ola E Scooters: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை - மகிழ்ச்சியில் ஓலா'