ETV Bharat / business

வீழ்ச்சிப் பாதையில் சென்செக்ஸ்! - சென்செக்ஸ்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 137.41 புள்ளிகள் குறைந்து 46 ஆயிரத்து 752 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது.

வீழ்ச்சி பாதையில் சென்செக்ஸ்!
வீழ்ச்சி பாதையில் சென்செக்ஸ்!
author img

By

Published : Dec 18, 2020, 11:19 AM IST

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கிவந்த நிலையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல் முறையாக 47,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதனால், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டன.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட நிலையில்லா தன்மை காரணமாக, அடுத்த சில நிமிடங்களில் பங்குச்சந்தை வர்த்தகம் வீழ்ச்சி அடைய தொடங்கியது.

சென்செக்ஸ் வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று காலை 47 ஆயிரத்து 26.02 புள்ளிகளுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. சுமார் 9.40 மணியளவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 137.41 புள்ளிகள் குறைந்து 46 ஆயிரத்து 752 புள்ளிகளுடன் வர்த்தகம் ஆகிவருகிறது. இது முன்பு இருந்த புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 0.29 விழுக்காடு வர்த்தகம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிகிறது.

அதிகரிக்கும் நிஃப்டி

தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 43.95 புள்ளிகள் அதிகரித்து 13 ஆயிரத்து 696.75 ஆக வர்த்தகம் ஆகிவருகிறது. இது முந்தைய புள்ளிகளிலிருந்து 0.32 விழுக்காடு அதிகரித்துள்ளது. வங்கி, நிதி, உலோகம், எண்ணெய், எரிவாயு பங்குகளில் அதிக விற்பனை காணப்பட்டன.

இதையும் படிங்க: ஜூம் கொடுத்த ஷாக் - பண்டிகை நாள்களில் இலவச அழைப்பு கிடையாது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.