தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வைக் கண்டுவருகின்றன. இன்றைய வர்த்தக நாளில் இந்தியப் பங்குச்சந்தை அபாரமான உயர்வைக் கண்டது. வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 1,147.76 புள்ளிகள் (2.28 விழுக்காடு) உயர்ந்து வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
அதேபோல், தேசியப் பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 326.50 (2.19 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,245.60 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
சந்தையில் பஜாஜ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
இதையும் படிங்க: ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.77,815 கோடி ஈட்டிய அரசு, அதிக அலைக்கற்றையை வாங்கிய ஜியோ