கொரோனா வைரஸ் தாக்குதலால், சீன நாடு மட்டும் அல்லாமல் இந்தியப் பங்குச்சந்தையும் சரிந்துவருகிறது. கடந்த ஒரு வாரமாகவே இந்தியப் பங்குச்சந்தை சரிந்துவரும் நிலையில், இன்றைய முடிவின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.30 புள்ளிகள் சரிந்து 39,745.66 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.20 புள்ளிகள் சரிந்து 11,633.30 எனவும் வர்த்தமாகியுள்ளது.
கடும் சரிவை சந்தித்த பங்குகள்
- ஓஎன்ஜிசி
- ஹெச்.சி.எல். டெக்
- பாரத ஸ்டேட் வங்கி
- ஐசிஐசிஐ வங்கி
சிறப்பாகச் செயல்பட்ட பங்குகள்
- சன் பார்மா
- ஆக்ஸிஸ் வங்கி
- ஏசியன் பெயிண்ட்ஸ்
- டைட்டன்
பங்குச்சந்தை சரிவால் வர்த்தகர்கள் கலகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொதுத்துறை வங்கி இணைப்பு நிச்சயம் நடக்கும் - நிதியமைச்சர் திட்டவட்டம்