மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 32703.88 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 930 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 9587.20 எனவும் வர்த்தகமாகிவருகிறது.
சென்செக்ஸ், நிஃப்டியில் ஒரு பங்குகள் கூட சிறப்பாக வர்த்தகம் ஆகாதது முதலீட்டார்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு சரிவு கடந்த 12 ஆண்டுகளில் நடைபெற்றது இல்லை என பங்குதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
சரிவைச் சந்தித்து வரும் பங்குகளில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நிலைமை நீடித்து கொண்டே சென்றால், முதலீட்டார்கள் பல கோடி ரூபாயை இழக்கநேரிடும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிங்க: 1,700 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிவு