ETV Bharat / business

வோடபோன் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் - சிக்கலில் வோடபோன் எதிர்காலம்?

author img

By

Published : Feb 17, 2020, 11:14 PM IST

டெல்லி: புதிய விதிகளின்படி வோடபோன் செலுத்த வேண்டிய மொத்த தொகையில் ஒரு பகுதியை செலுத்த அனுமதி தரக்கோரி வோடபோன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Supreme court on Vodafone's plea
Supreme court on Vodafone's plea

2005ஆம் ஆண்டு டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. அதன்படி, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (adjusted gross revenue) அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 1.47 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று இன்று உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில் இன்று ரூ. 2,500 கோடியையும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் ரூ. 1,000 கோடியையும் செலுத்துகிறோம் என்றும், தங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை டிராய் எடுக்கக்கூடாது என்றும் வோடபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, வோடபோனின் இந்தக் கோரிக்கை மனுவை நிராகரித்தது.

முன்னதாக, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில் ஏர்டெல் செலுத்த வேண்டிய தொகையில் ஒரு பகுதியை (ரூ. 10,000 கோடி) இன்று அந்நிறுவனம் செலுத்தியது. தங்கள் நிறுவனத்தின் நிதிநிலையை சுயமதிப்பீடு செய்துகொண்ட பின் மீதி தொகை செலுத்தப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய விதிகளின்படி, ஏட்டெல் நிறுவனம் ரூ. 35,586 கோடியும், வோடபோன் நிறுவனம் ரூ. 53,038 கோடியும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்துக்குச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'அது ஒரு கோரிக்கை திட்டம், தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறோம்': நிர்மலா சீதாராமன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.