மும்பை: வீட்டுக் கடனுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.
நாட்டின் மிகப்பெரும் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் 70 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளது.
இதன்மூலம் 6.70 விழுக்காடாக வீட்டுக்கடனுக்கான வட்டி குறைந்துள்ளது. வட்டிக் குறைப்பு மட்டுமில்லாமல், செயல்பாட்டுக் கட்டணத்திலிருந்தும் வங்கி முழு விலக்களித்துள்ளது.
தொடர்ந்து, பெண்களுக்கு வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் கூடுதலாக ஐந்து புள்ளிகளைக் குறைத்துள்ளது. எஸ்பிஐ யோனோ செயலி மூலம் கடன் நாடுவோர்களுக்கு, மேலும் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் கூடுதலாக ஐந்து புள்ளிகளை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.