ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ஆயிரம் முதல் மூவாயிரம் ரூபாய் வரை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அப்படி வைத்திருக்காதவர்களிடமிருந்து 5 முதல் 15 ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், தற்போது வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. இதன் மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எஸ்.எம்.எஸ். கட்டணத்தையும் ரத்து செய்வதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. முன்பு சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம், ஒரு லட்ச ரூபாய் வரை 3.25 விழுக்காடகவும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் 3 விழுக்காடாகவும் இருந்தன. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி இனி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி மூன்று விழுக்காடாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி ஆசியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி இல்லை!