மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு, சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் ஸ்டோர்களை ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மீண்டும் திறக்கப்படும் என அறிவிதுள்ளது.
சாம்சங் நிறுவனம் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது: -
1. ஸ்மார்ட் ஸ்டோர்கள் திறக்கப்படுவதற்கு முன்பு அவை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுகின்றன.
2. வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வைக்கப்படும்.
3. தகுந்த இடைவெளிை கடைப்பிடிக்கபடும்.
4. கூட்டத்தைத் தவிர்க்க, ஒரே நேரத்தில் குறைந்த அளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
5. சாம்சங் நிறுவன ஊழியர்கள் மதிய உணவு உண்ண ஒரே நேரத்தில் செல்லக் கூடாது.
6. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் கையுறை, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
7. வாடிக்கயாளர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
8. ஸ்வைப்பிங் இயந்திரங்கள் சுத்தம் செய்யப்படும்.
இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படும் என சாம்சங் நிறுவனம் உறுதியுடன் உள்ளது.
இதையும் படிங்க:சாம்சங் ஐபேடில் மறைத்து தங்கம் கடத்திய பலே ஆசாமி கைது!