உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக், ஜியோ நிறுவனத்தின் 9.9 விழுக்காடு பங்குகளை ரூ.43,574 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக ஃபேஸ்புக் உள்ளது.
சுமார் 39 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவுடன் ஃபேஸ்புக் கைகோர்த்துள்ளது முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
இதையடுத்து, இந்திய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 11.05 விழுக்காடு உயர்ந்து ரூ.1,374க்கு விற்பனையானது. அத்துடன் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் ரூ. 45,527.62 கோடி உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.8.29 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதையும் படிங்க: உலகின் முன்னணி டிஜிடல் சக்தியாக இந்தியாவை மாற்றுவோம் - அம்பானி நம்பிக்கை