ETV Bharat / business

17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி மானியம் விடுவிப்பு - ரூ.9,871 கோடி மானியம் விடுவிப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு ரூ.9,871 கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.

Centre's revenue deficit grant
Centre's revenue deficit grant
author img

By

Published : Sep 9, 2021, 5:20 PM IST

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியத்தொகையை நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. 2021-22 நிதியாண்டிற்கான 15ஆவது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த மானியத்தொகை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு ஆறாவது தவணையாக ரூ.9,871 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நிதிக்குழுவின் பரிந்துரையின்படி 2021-22 நிதியாண்டில் இதுவரை ரூ.59,226 கோடி மாநில அரசுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

மாணியத் தொகை பெறும் மாநிலங்கள்

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், அசாம், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் மானிய தொகை பெறுகின்றன.

தற்போதைய ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.183.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு என மொத்தம் ஆயிரத்து 102 கோடி ரூபாய் நிதியமைச்சகம் வழங்க வேண்டும்.

இதையும் படிங்க: NIRF RANKING: தேசிய அளவில் முதலிடம் பெற்ற ஐஐடி சென்னை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.