ETV Bharat / business

கரோனா - ரூ. 500 கோடியை அளித்த ரிலையன்ஸ்! - பிதரமரின் நிவாரண நிதி

டெல்லி: கோவிட் 19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 500 கோடியை வழங்குவதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

Reliance
Reliance
author img

By

Published : Mar 30, 2020, 8:35 PM IST

கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 வைரஸ் தொற்று சீனாவில் பரவத்தொடங்கியது. சீனாவில் வைரஸ் தொற்று தற்போது கட்டுக்குள் வந்துவிட்டது. இருப்பினும் இத்தாலி, அமெரிக்க, ஈரான் போன்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

அதேபோல இந்தியாவிலும் இதுவரை 1,071 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 942 பேருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. கோவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு தற்போது பெரும் நெருக்கடி நிலைமையைச் சந்தித்துவருவதாகவும், இதற்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களும் நிறுவனங்களும் தங்களால் முடிந்த நிதியுதவியை தரலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து டாடா நிறுவனம் ரூ. 1,500 கோடியும் பேடிஎம் ரூ.500 கோடியும் நிதியுதவி அளித்தன. இந்நிலையில், பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 500 கோடியை வழங்குவதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா - பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 500 கோடி அளித்த பேடிஎம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.