ETV Bharat / business

ரிலையன்ஸ் நிறுவனங்களை ஏலம் கேட்க காலக்கெடு நீட்டிப்பு - அனில் அம்பானி கடன்

டெல்லி: கடனில் மூழ்கியுள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியான ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் பங்குகளின் ஏலத்திற்கான ஒப்பந்த புள்ளியை சமர்ப்பிக்கும் காலக்கெடு டிசம்பர் 17ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Reliance Capital
Reliance Capital
author img

By

Published : Dec 8, 2020, 4:50 PM IST

ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். ஆனால் அவரது சகோதரரும் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் தலைவருமான அனில் அம்பானி பெரும் கடனில் உள்ளார்.

அவரது பல்வேறு நிறுவனங்களின் பெயரில் வங்கிகளில் பெறப்பட்ட சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அவரால் திருப்பி அளிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவரது நிறுவனங்களின் சொத்துகளை விற்று பணம் திரட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அவரது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், பல்வேறு நிறுவனங்களில் வைத்துள்ள பங்குகளை விற்பனை செய்ய ஏலம் கோரப்பட்டது. இதுவரை ரிலையன்ஸின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் ஏல ஒப்பந்த புள்ளியை சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஏலம் கேட்பதற்கான ஒப்பந்த புள்ளியை சமர்பிப்பதற்கான இறுதி தேதி டிசம்பர் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஏல கேட்பதற்கான ஒப்பந்த புள்ளியை சமர்பிப்பதற்கான இறுதி தேதி டிசம்பர் 1ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: '5ஜி சேவையில் தனித்திருப்பது ஆபத்தானது' - அம்பானிக்கு ஏர்டெல் பதிலடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.