டிஜிட்டல் பரிவர்த்தனையில் ப்ரீபெய்ட் கட்டணக் கருவி எனப்படும் Prepaid Payment Instrument (PPI) முக்கியப் பங்காற்றுகிறது. இந்நிலையில், ரூபாய் 10 ஆயிரத்துக்கும் குறைவான சரக்கு மற்றும் சேவைகளுக்கு மட்டும் பயன்படும் வகையில் புதிய ப்ரீபெய்ட் கட்டணக் கருவியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தவுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ரூபாய் 10 ஆயிரத்துக்கும் குறைவான சரக்கு மற்றும் சேவைகளுக்கு மட்டும் இந்த Prepaid Payment Instrument-ஐ பயன்படுத்தமுடியும். மேலும், இதில் பணம் செலுத்துவதும் எடுப்பதும் ஒரு வங்கி கணக்கிலிருந்தே செய்ய முடியும். இதன் மூலம் முறைகேடுகள் குறையும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே வெளியிடப்பட்டுள்ளதாகவும்; மாதம் ஒன்றுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை பயனாளர்கள் இந்த கார்டு மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதிய உச்சத்தில் வெங்காய விலை!