ETV Bharat / business

’வங்கி லாக்கரை உடைக்க அதிகாரம்’ - புதிய விதிகள் அறிவிப்பு! - வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதி

வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
author img

By

Published : Aug 19, 2021, 12:20 PM IST

வங்கி லாக்கரை பயன்படுத்த அவற்றின் அளவிற்கேற்ப ஆண்டுக்கு 2,000 முதல் 8,000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவதில் புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புதிய விதிகளின் விவரங்கள்:

  • வாடிக்கையாளரின் பொருள்களில் வங்கி ஊழியர்களால் மோசடி நடக்கும்பட்சத்தில், ஓராண்டு வாடகையைப் போல 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கி வழங்க வேண்டும்.
  • தீ விபத்து அல்லது வங்கி கட்டடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு பெட்டகம் சேதமடைந்தாலும் இந்த இழப்பீட்டைத் தர வேண்டும்.
  • பாதுகாப்பு பெட்டகத்தில் சட்டத்திற்குப் புறம்பான பொருள்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்ற விதிமுறையை, வாடிக்கையாளர் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில் வங்கிகள் சேர்க்க வேண்டும்.
  • வங்கிகள் அவற்றின் கிளை வாரியாக காலியாக உள்ள பாதுகாப்பு பெட்டகங்கள் குறித்த விவரங்களை வெளிப்படையாக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.
  • பாதுகாப்பு பெட்டகம் கிடைக்காத வாடிக்கையாளருக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்க வேண்டும்.
  • வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகப் பொருள்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும்.
  • நில நடுக்கம், வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களாலோ அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்திலோ பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பொருள்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி பொறுப்பேற்காது.
  • பாதுகாப்பு பெட்டக வாடகைக்கு மூன்று ஆண்டுகள் குறித்த கால வைப்பு நிதியை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். இது தற்போது லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.
  • தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாதுகாப்பு பெட்டக வாடகை செலுத்தத் தவறினால் பெட்டகத்தை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது.

இந்தப் புதிய விதிமுறைகள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சமையல் எண்ணைய் உற்பத்தியை பெருக்க ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.