Latest National News ஐடிபிஐ வங்கி, ஆந்திர வங்கி, சிண்டிகேட் வங்கி உள்ளிட்ட ஒன்பது பொதுத் துறை வங்கிகள் மூடப்படும் என்றும் எனவே அவ்வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஜாக்கிரதை என்ற ரீதியில் செய்திகள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகக் காட்டுத் தீயாகப் பரவிவந்தன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில், "சில வங்கிகள் ரிசர்வ் வங்கியால் மூடப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானது" என்று பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேலும் நிதித் துறை செயலர் ராஜீவ் குமார், "பொதுத் துறை வங்கிகள் மூடப்படுவதாகச் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை. மாறாக பொதுத் துறை வங்கிகளை வலுப்படுத்துவது தொடர்பான வேலைகளையே ரிசர்வ் வங்கி தற்போது செய்துவருகிறது" என்று ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்தில்தான் பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: தலைகாட்டிய வாகனப்பிரியர்களின் குட்டி காதலி..!