ETV Bharat / business

'பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதாரம் மீட்கப்படும்' - ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை - பாரத் ஸ்டேட் வங்கி கருத்தரங்கு

மும்பை: நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்து பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதாக அந்த வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

SBI
SBI
author img

By

Published : Jul 11, 2020, 6:02 PM IST

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று பாரத ஸ்டேட் வங்கியின் நடத்திய பொருளாதார கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தைத் தொடர்ச்சியாகக் குறைத்துவருகிறது. கரோனாவுக்கு பின்னரும் வட்டிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பணப்புழக்கம் அதிகரிக்கும் என நம்பிக்கையுள்ளது.

நூறாண்டுக்கு ஒருமுறை வரும் இதுபோன்ற பெருந்தொற்று உலகளவில் ஏற்படுத்திய தாக்கம் விநியோகச் சங்கிலியை முற்றிலுமாகப் பாதித்துள்ளது. நமது பொருளாதார நிலைத்தன்மை, வலிமையைச் சோதித்துள்ள இந்தப் பெருந்தொற்றை விரைவில் கடந்துவருவோம் என நம்புவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பு நடவடிக்கை வாராக்கடனை அதிகரித்து, வங்கி மூலதனத்தைக் காலி செய்துவிடும் என்ற அச்சத்தைப் பலர் கொண்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தை ரிசர்வ் வங்கி முறையாகக் கையாளும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்னாப் டிராகனின் புதிய பிராசஸர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.