நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 விழுக்காடாக சரியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பட்ஜெட் (வரவு-செலவு திட்டம்) தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு தொழில் வல்லுனர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல. நாட்டின் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகும். நாட்டின் அடிப்படை பொருளாதாரம் வலுவாகவே உள்ளது. ஆகவே மீண்டு வருவதற்கான சக்தி நமது பொருளாதாரத்துக்கு உண்டு எனக் கூறினார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரு நிறுவன முதலாளிகள் வங்கிக் கடன்கள் குறித்து யோசனை தெரிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்ட நரேந்திர மோடி, இதுதொடர்பாக பின்னர் பார்க்கலாம் என பதில் அளித்துள்ளார்.
-
PM @narendramodi chaired a productive interaction with economists and experts to discuss topics ranging across economy, social sector and startups in #NITIAayog today. pic.twitter.com/DoT6rf6NQ1
— NITI Aayog (@NITIAayog) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PM @narendramodi chaired a productive interaction with economists and experts to discuss topics ranging across economy, social sector and startups in #NITIAayog today. pic.twitter.com/DoT6rf6NQ1
— NITI Aayog (@NITIAayog) January 9, 2020PM @narendramodi chaired a productive interaction with economists and experts to discuss topics ranging across economy, social sector and startups in #NITIAayog today. pic.twitter.com/DoT6rf6NQ1
— NITI Aayog (@NITIAayog) January 9, 2020
இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, ரயில்வே மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், நீதி ஆயோக் துணைத் தலைவா் ராஜீவ் குமாா், தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவா் விவேக் தேவ்ராயும் கூட்டத்தில் கலந்து கொண்டாா். எனினும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளவில்லை. இதனை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.
2020-21ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்வுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு பெண்ணின் வேலையை செய்ய இத்தனை ஆண்களா? பாஜவுக்கு காங்கிரஸ் கேள்வி