ETV Bharat / business

தொழில்முனைவோர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் - அமைச்சர் பியூஷ் கோயல்

author img

By

Published : Jan 14, 2022, 6:36 PM IST

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது சர்வதேச மூலதன நிதியங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்தார்.

Piyush Goyal
Piyush Goyal

வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை ஏற்பாடு செய்த சர்வதேச மூலதன நிதியங்களுடனான நான்காவது வட்டமேசை மாநாட்டில் தலைமை ஏற்று அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "புதிய துறைகளில் முதலீடு செய்து ஊக்குவிக்குமாறும், இந்திய தொழில்முனைவோர் உருவாக்கிய அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்து மேம்பாட்டிற்கான நிபுணத்துவத்தை வழங்கி அதிக அளவில் முதலீடுகளை செய்யுமாறும் மூலதன நிதியங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து எண்ணற்ற நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்திலும் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

55 துறைகளில் பரவியுள்ள 60 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவுபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவதாகவும், இவற்றில் 45 சதவீதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து உருவாகியுள்ளதாகவும், 45% நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குனராவது இருப்பதாகவும் இந்திய ஸ்டார்ட்அப் சூழலியலின் பன்முகத்தன்மை, பரவல் மற்றும் உள்ளடக்கலுக்கு சான்றுகளாக இவை திகழ்வதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டார்ட் அப் சூழலுக்காக மட்டும் 49 ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டிருப்பதாகவும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதை மேம்படுத்தவும், மூலதனம் திரட்டுவதை எளிதாக்க உதவவும், தாக்கல் சுமைகளை குறைப்பதையும் இவை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டார்ட் அப் இந்தியா புதுமைகள் வாரத்தின் ஒரு பகுதியாக காணொலி மூலம் இந்த வட்டமேசை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட சர்வதேச மூலதன நிதியங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள் இதில் கலந்து கொண்டனர்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என்னது ஒரு கோடியா..! - ஆச்சரியம் கொடுத்த ஆடுகள் விற்பனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.