ETV Bharat / business

உயரும் கச்சா எண்ணெய் விலை - பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறதா? - எண்ணெய் நிறுவனங்கள்

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், வரும் வாரம் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Petrol price may rise again
Petrol price may rise again
author img

By

Published : Aug 8, 2020, 6:01 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கடந்த ஒரு வார காலமாக கச்சா எண்ணெய் விலை 42 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமானது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை மெல்ல உயர்ந்து 45 டாலர்களுக்கு வர்த்தகமாகிறது. இதன் காரணமாக வரும் வாரம் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அடுத்த இரண்டு நாள்களுக்கு கச்சா எண்ணெய் விலையைத் தொடர்ந்து கவனிப்போம். கச்சா எண்ணெய் விலை குறையவில்லை என்றால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் மாற்றியமைக்கப்படலாம்" என்றார்.

கரோனா காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பை கருத்தில்கொண்டு, டெல்லியில் கடந்த ஜூன் மாதம் மதிப்புக் கூட்டு வரி 30 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் பெட்ரோலைக் காட்டிலும் விலை உயர்ந்த எரிபொருளாக டீசல் மாறியது. இதனால் போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை கெஜ்ரிவால் அரசு 30 விழுக்காடாக இருந்த மதிப்புக் கூட்டு வரியை 16.75 விழுக்காடாக குறைத்தது. இதனால் 81.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீசலின் விலை, தற்போது 73.56 ரூபாயாகக் குறைந்துள்ளது.

மறுபுறம் கடந்த ஜூன் 29ஆம் தேதி ஐந்து பைசா வரை உயர்த்தப்பட்ட பெட்ரோலின் விலை அதன்பின் மாற்றியமைக்கப்படவில்லை. இதன் காரணமாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தொடர்ந்து 80.43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விமான எரிபொருள் 3% உயர்வு! பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயுவில் மாற்றம் இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.