கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டுவந்தது. அதனைத்தொடர்ந்து 60 நாள்களுக்கு பிறகு விலை உயர்ந்ததுள்ளது.
அதன்படி, டெல்லியில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு 15 பைசா அதிகரித்து ரூ.81.38க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசலின் விலை லிட்டருக்கு 20 பைசா ரூ.70.88க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று பெட்ரோல், ரூ.81.23க்கும், டீசல் ரூ.70.68க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று (நவ.21) பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ரூ.84.46க்கும், டீசல் விலை லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.76.37க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு மாதமாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல்!