மந்த நிலையில் உள்ள இந்தியப் பொருளாதாரத்தை சரிசெய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. கார்ப்பரேட் வரி குறைப்பு, வங்கிகளுக்கு பண உதவி போன்ற சலுகைகள் செய்து வரும் நிலையில், தற்போது தனிநபர் வருமான வரியை குறைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐந்து விழுக்காடு வரி செலுத்த வேண்டியுள்ளது. மேலும் ஐந்து கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 42.74 விழுக்காடு வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த விகிதத்தால் வரி செலுத்துபவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் மேலும் வரிக்குறைப்பு செய்வதன் மூலம் நுகர்வை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து பேசப்போவதாகவும், பிப்ரவரி மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே இந்த தனி நபர் வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 63ஆவது இடத்தில் இந்தியா