நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, அவை மேம்படுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கையால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனி புழக்கத்திற்கு வராது என்ற தகவல் தீயாய் பரவத் தொடங்கியது. இது மக்களிடையே தேவையற்ற பரபரப்பை உண்டாக்கிய நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இது குறித்து ஏடிஎம் மையங்களைப் பராமரிக்கும் அமைப்பான APMEA அமைப்பின் நிர்வாக இயக்குனர் மகேஷ் ராமமூர்த்தி வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து, 'நாடு முழுவதும் உள்ள சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏடிஎம் மையங்கள் வாடிக்கையாளர்களின் சேவை மேம்பாட்டிற்காக மேம்படுத்தப்படவுள்ளன. வங்கிகளிடம் கலந்து ஆலோசித்தபின்பே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தேவையற்ற புரளிகளைக் கண்டு வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை. வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது' என மகேஷ் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 26 வயதில் ரூ. 7,800 கோடி சொத்து - இளம் வயதில் சிகரம் தொட்ட ’ஓயோ’ நிறுவனர்