ETV Bharat / business

பான்- ஆதார் இணைப்பு: நீங்கள் செய்ய வேண்டியது என்ன? - உச்ச நீதிமன்றம்

உங்கள் பான் (PAN) கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க எளிய வழிமுறைகள் வருமாறு.

பான் ஆதார் இணைப்பு
author img

By

Published : Mar 29, 2019, 11:24 PM IST

பான்- ஆதார் இணைப்பு: (Pan card- Aadhar linking)

ஆதார் கார்டுடன் வங்கி கணக்கு, செல்போன் எண், பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், செல்போன் எண், வங்கி கணக்கு, பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆதார் கட்டாயமில்லை என உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, வருமான வரி தாக்கல் செய்ய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. மேலும் வரும் மார்ச் 31 ஆம் தேதியே இதற்கு கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா, வருமான வரித்துறை இதுவரை 42 கோடி பான் கார்டுகளை வழங்கியுள்ளதாகவும், அவற்றில் 23 கோடி கணக்குகள் தங்களது பான் கார்டை ஆதாருடன் இணைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இணைக்காவிட்டால்?

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால்.....

  • உங்களால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இயலாது
  • உங்களால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது

இணைக்கும் வழிமுறைகள்:

பான் ஆதாரை இரண்டு வழிகளில் இணைக்க முடியும். ஒன்று வருமான வரித்துறை இணையதளம் மூலம் இணைப்பது, மற்றொன்று எஸ்எம்எஸ் (குறுஞ்செய்தி) மூலம் இணப்பது.

வருமான வரித்துறை இணையதளம்

இணையத்தில், லிங் க் ஆதார் (Link Aadhar) என ஆங்கிலத்தில் டைப் செய்தாலே வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் இணையதளம் முதலில் வந்து நிற்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்கள் பான் எண், உங்கள் 12 இலக்கு ஆதார் எண், ஆதார் கார்டில் உள்ளபடியே உங்கள் பெயர் ஆகியவற்றை நிரப்பி அதற்கு கீழே உள்ள கேப்ட்சா கோடை (captcha code) பதிவிட வேண்டும். அதன்பின் லிங்க் ஆதார் என்ற பொத்தானை அழுத்தினால் வேலை முடிந்துவிடும்.

இந்த இணையதளத்தில் நீங்கள் ஏற்கெனவே பான்- ஆதாரை இணைத்துவிட்டீர்களா எனவும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

எஸ்எம்எஸ் மூலம் இணைக்க கீழ்கண்டவாரு தட்டச்சு செய்ய வேண்டும்:

UIDPAN<12இலக்கு ஆதார் எண்><10இலக்கு பான் எண்>

பின் இந்த மெசேஜை உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்

எடுத்துக்காட்டு:

UIDPAN<123456789000><1234567890> என டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.