இதுகுறித்து ஓயோ நிறுனத்தின் தலைவர் ரித்தீஸ் அகர்வால், ஓயோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மின்அஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், "ஓயோ நிறுவனத்தை மறுசீரமைக்கவுள்ளதால், சில ஊழியர்களை ஓயோ நிறுவனத்தைத் தாண்டி வேறு நிறுவனத்தில் வேலையில் சேரும்படி கேட்டுக்கொள்கிறோம். உண்மையைச் சொன்னால், இது எங்களுக்கு எளிதான முடிவல்ல.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி ஓயோ நிறுவனம் நகர்வதால், வேறுவழியின்றி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை எங்கள் நிறுவனத்திற்கு உழைத்தவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நிறுவனத்தின் முடிவால் பாதிக்கப்படும் அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த கடினமான சூழ்நிலையில், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நிறுவனம் தயாராகவே உள்ளது. கடந்த சில மாதங்களாக பல ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து ஓயோ நிறுவனத்திற்குள்ளேயே புதிய பணியை நாங்கள் வழங்கியுள்ளோம். இவை எல்லாவற்றையும் தாண்டி சிலரை மட்டுமே, வேறு நிறுவனங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ரித்தீஸ் அகர்வால் அனுப்பியுள்ள மின்அஞ்சலில் சரியாக எத்தனை பேரை பணி நீக்கம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடப்படவில்லை என்றாலும் சுமார் 1,000 பேரை ஓயோ பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இதையும் படிங்க: உயர்நிலை அலுவலர்களை அதிரடி பணி நீக்கம் செய்த வால்மார்ட்