இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஓஎன்ஜிசி புதிய திட்டத்தை செயல்படுத்திவருகிறது. அதாவது 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் 220 எண்ணெய் கிணறுகளை உருவாக்க உள்ளது. இந்நிலையில் அஸ்ஸாம் அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் அதற்கான வேலையையும் தொடங்கியுள்ளது.
மேலும் இந்தத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் முடிவுபெறும் எனவும், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எண்ணெய் ஏற்றுமதி 10 விழுக்காடு உயர்வுபெறும் என ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.