சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,655 என நிர்ணயம்செய்யப்பட்டு சவரனுக்கு ரூ. 37,240 என விற்பனையாகிறது.
நேற்றைய விலையை ஒப்பிடுகையில் கிராமுக்கு 33 ரூபாயும், சவரனுக்கு 264 ரூபாயும் அதிகரித்துள்ளது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5,019 என நிர்ணயம்செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 40,152 என விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ. 71.70 ஆகவும், கிலோ வெள்ளிக்கு 500 ரூபாய் அதிகரித்து ரூ. 71,700 ஆகவும் விற்பனையாகிறது.