ETV Bharat / business

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தமா? - நிதியமைச்சகம் விளக்கம் - மத்திய அரசு ஊழியர்களின் சம்பள பிடித்தம்

டெல்லி: மத்திய அரசின் ஊழியர்களின் சம்பளத்தில் 30 விழுக்காடு பிடித்தம் செய்யப்படுவதாகப் பரவிய தகவல் பொய்யானது என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

Ministry of Finance
Ministry of Finance
author img

By

Published : May 11, 2020, 4:35 PM IST

கோவிட்-19 பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக இந்தியப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. நாட்டிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குவது, சம்பளத்தில் பிடித்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளன.

இந்த ஊரடங்கு காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு மட்டமின்றி மத்திய, மாநில அரசுகளின் வருவாயும் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் அவ்வப்போது பரவிவருகிறது.

அதேபோல, இன்றும் டி பிரிவு மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் நீங்கலாக மற்ற மத்திய அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 30 விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் திட்டம் அரசுக்கு தற்போது இல்லை என்று நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

  • There is no proposal under consideration of Govt for any cut whatsoever in the existing salary of any category of central government employees.
    The reports in some section of media are false and have no basis whatsoever.@nsitharamanoffc @PIB_India @DDNewslive @airnewsalerts

    — Ministry of Finance 🇮🇳 #StayHome #StaySafe (@FinMinIndia) May 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து நிதியமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், "மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் எந்தவொரு திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை. சில ஊடகங்களில் இதுகுறித்து வெளியாகும் செய்திகள் தவறானவை. அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை" என்று பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐஆர்சிடிசி பங்குகள் உயர காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.