மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு, பல்வேறு நிர்வாக சீர்த்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக அரசு ஊழியர்கள் பலரை வீட்டிலேயே பணிபுரிய உத்தரவிட்டு, 30 விழுக்காடு ஊழியர்களையே அலுவலகத்திற்கு வரவைத்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைக்கப்படும் எனவும், தற்போது உள்ள 60 வயது 50ஆகக் குறைக்கப்படும் எனச் செய்தி பரவியது. கரோனா ஊரடங்கால் வேலையிழப்பு ஏற்பட்டு நாடு முழுவதும் இளைஞர்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதால், அவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டமாக அரசு இதை மேற்கொள்ளவுள்ளதாக வதந்திகள் கிளம்பின.
"இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு சில விஷம சக்திகள் இதுபோன்ற வதந்தியைப் பரப்பிவருகின்றன" என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி திரட்டும் முனைப்பில் அரசு!