பிஎஸ் -IV வாகனங்களை 2020 மார்ச் 31ஆம் தேதி வரை விற்க மத்திய அரசாங்கம் அனுமதி அளித்தது. இதையடுத்து 2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் -IV வாகனங்களை விற்கவோ பதிவு செய்யவோ தடை விதித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி, எந்தவொரு கார் அல்லது பைக் உற்பத்தியாளர் அல்லது விற்பனையாளர் பிஎஸ் -IV வாகனங்களை 2020 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு விற்கவோ பதிவு செய்யவோ முடியாது என தெரிவித்தது.
இந்த வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதில் பிஎஸ் -IV வாகனங்கள் மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு விற்பனை செய்திருந்தால், அந்த வாகனங்களை பதிவு செய்ய முடியாது என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட் அமைச்சருக்கு கரோனா - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி