ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான நிசான் வாகன விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் நிசான் நிறுவனத்தின் கார்கள் விலை 5 விழுக்காடு உயர்த்தப்படுகிறது.
இந்த விலை உயர்வானது நிசான் மற்றும் டாட்சன் நிறுவனத்தின் அனைத்துவகை மாடல்களுக்கும் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. நிசான் நிறுவனத்தின் கார்கள் ரூ.2.89 லட்சம் தொடங்கி ரூ.14.15 லட்சம் வரை விற்பனையாகிறது.
இந்த விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவத்சவா, “தற்போதைய சந்தை சூழலில் வாகன உற்பத்திக்கான உள்ளீட்டு விலை உயர்வு காரணமாகவே இந்த விலை உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
ஏற்கனவே, மாருதி சுசுகி, ரெனால்ட், ஹோன்டா, மஹிந்திரா, போர்டு, ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஜனவரி மாதம் முதல் விலை உயர்வை அறிவித்தன என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: உலகளவில் டிவி விற்பனை: தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதலிடத்தில் சாம்சங்!