ETV Bharat / business

புதிய சீர்திருத்தங்களால் பாதுகாப்புத்துறையில் மாற்றம் நிகழும் - டி.ஆர்.டி.ஓ இயக்குநர்

டெல்லி: மத்திய அரசு அண்மையில் அறிவித்த பாதுகாப்புத்துறை சார்ந்த சீர்திருத்தம் குறித்து டி.ஆர்.டி.ஓ இயக்குநர் சதீஷ் ரெட்டியிடம் ஈடிவி பாரத் மூத்த செய்தியாளர் சஜீப் கே. பௌரா நடத்திய நேர்காணலின் தமிழாக்கம் இதோ...

DRDO
DRDO
author img

By

Published : May 18, 2020, 7:35 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் வெளியிட்ட பாதுகாப்புத் துறை சார்ந்த சீர்திருத்தங்கள், அந்த துறை மற்றும் பாதுகாப்பு சார்பு தொழில்முனைவோரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு உச்ச வரம்பை 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இது குறித்து டி.ஆர்.டி.ஓ அமைப்பின் இயக்குநர் சதீஷ் ரெட்டி ஈடிவி பாரத் செய்தியாளரிடம் அளித்த நேர்காணலின்போது பேசியதாவது, "மத்திய அரசு அறிவிப்பின்படி எதிர்காலத்தில் எந்தெந்த தயாரிப்பு உபகரணங்கள் தொடர்ந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என்பதற்கான பட்டியல் எதுவும் இதுவரை இல்லை. ஆனால் அது விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுகணைகள், ரேடார் தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணு போர் போன்ற தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் திறனை இந்தியா கொண்டுள்ளது. இது படிப்படியாக மேம்பட்டு, வரும் ஆண்டுகளில் பிற நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யத் தேவையில்லை என்ற நிலை உருவாகும்.

உள்நாட்டு உற்பத்தி அமைப்புகளை வளர்ப்பதற்கான சவாலுக்கு இந்திய தொழித்துறை தற்போது தயாராகியுள்ளது. இது இந்தியாவில் தொழில்கள் செழிக்க உதவும். இது இந்தியத் தொழில்துறை அடுக்குகளில் உள்ள சிக்கல்களை களைய உதவும்.

பிற நாடுகளிலிருந்து உதிரி பாகங்கள் வாங்குவதற்கு இந்தியா அதிகளவிலான தொகையை செலவிடுகிறது. புதிய சீர்திருத்தங்கள் மூலம், இதே பணத்தை கொண்டு உள்நாட்டு உற்பத்தியை வளர்ப்பதில் முதலீடு செய்யலாம். இது ஒரு வகையில் இந்தியத் தொழில்களுக்கு அந்நியச் செலாவணியை வழங்கும் மற்றும் நாட்டிற்கு நிறைய அந்நிய செலாவணியைக் கொண்டுவரும்.

இந்தியாவில், வெளிநாடுகள் முதலீடு செய்யத் தொடங்கும்பட்சத்தில், விநியோகச் சங்கிலியில் எந்தவித இடையூறும் இல்லாமல் தொழில்துறை துறை செழிக்கும். பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் பாதையில் செல்கிறது.

அந்நிய நேரடி முதலீட்டை 74 விழுக்காடாக உயர்த்தியதன் மூலம் இந்தியாவில் அந்நிய முதலீட்டிற்கான கதவுகளைத் திறந்துள்ளது. நாட்டில் தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகமாகும்பட்சத்தில், பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்தியா தன்னிறைவு பெறும்.

உள்நாட்டு உற்பத்தி இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். அனைத்து துறைகளும் சரியான பாதையில் இயங்கும் பட்சத்தில், சில ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயரும்.

புதிய சீர்திருத்தங்கள் அறிவிப்பில் டி.ஆர்.டி.ஓவின் பங்கு மிகவும் முக்கியமானது. இனி டி.ஆர்.டி.ஓ தனித்து இயங்காது என்ற பட்சத்தில் அதன் விதிமுறைகள் நிச்சயமாக கடுமையானதாக இருக்கும். டி.ஆர்.டி.ஓ ஒரு தொழில்நுட்ப வழங்குநர் மட்டுமே", என்றார்.

இதையும் படிங்க: சிறப்பு ரயிலுக்கு ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்துங்கள்: மம்தாவுக்கு ம.பி. முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.