சென்னை: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை படிப்படியாக தனியார் மயமாக்கப்படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.
இதனை கண்டித்து டிசம்பர் 16, 17ஆம் தேதிகளில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள், கிளை மேலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வங்கிகள் சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் மேற்கூறிய நாள்களுக்கு ஏற்றவாறு வங்கி பரிவர்த்தனைகளை திட்டமிட்டுகொள்வது நல்லது.
இதையும் படிங்க: தொடர் வங்கி விடுமுறை எதிரொலி - நைசாக புகுந்த கொள்ளையர்கள்!